Monday, September 15, 2014

***** தாடி மஹாத்மியம்*******

முன் குறிப்பு :: சற்றே பெரிய பதிவு. அவசரத்தில் படிக்க வேண்டாம்.

அன்புடையீர் 

நலந்தானே......

இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமல்ல. மகளிரும் படிக்கலாம். 
என்ன,  படிக்க மட்டும் தான் முடியும்.....  !!

கீழே இருக்கும் படங்களை உற்றுப்  பாருங்கள்......




இந்த compilation முடித்த பின் , ஒரு பரிசோதனைக்காக என் மகளிடம் இதைப் பார்த்து என் பதிவின் தலைப்பை கணிக்கச் சொன்னேன். அவள் சட்டென்று "பிரபலமான மனிதர்கள்" என்று நான் எதிர்பார்த்ததையே சொன்னாள்  
(பிறகு கீழ் வரிசையில் இருக்கும் சிலர் யார் என்று கேட்டு தெரிந்து கொண்டாள் - அது வேறு விஷயம்).

இதே தவற்றை நீங்களும் செய்து விடக்கூடாது என்ற பேரன்போடு மீண்டும் அதே கேள்வியை கேட்பதற்குள் ........ எனக்கு அது அபத்தமான கேள்வி என்று புரிகிறது. தலைப்பைதான் நீங்கள் பார்த்து விட்டீர்களே ? 

ஆனால் உங்களுக்கும் ஒரு சூட்சமமான ஒரு விஷயம் வைத்து இருக்கிறேன். மஹாகவி (கடைசி photo ) வழக்கமான தாடிக்காரர் அல்ல. என் போன்ற ஒரு சுதந்திரமான மனிதர்.....அவர் தாடி வைத்திருந்த ஒரு கால கட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு photo இது. எனவே இது தாடிகளைப் பற்றிய பதிவு - மனிதர்களைப் பற்றியது அல்ல என்ற பக்குவம் (??) உங்களுக்கு வந்து இருக்கலாம்.

தவிர , தாடி என்பது ஒரு உலகளாவிய விஷயம் என்பதாலும், மதம் , தத்துவம் பற்றி மட்டும் சார்ந்தது கிடையாது என்பதாலும் சிலரை தேர்ந்து எடுத்தேன்.... (பெர்னாட் ஷா , லியோ தல்ஸ்தோய் மற்றும் நம் பிரதமர்) . எவ்வளவு யோசிக்கிறேன் பார்த்தீர்களா... அது தான் என் சிறப்பு (!!)

இவ்வளவு பரந்து விரிந்த விஷயத்திற்கு ஒரு மகாத்மியம் எழுதுவது முறை தானே  ?

எனக்கு தாடி மேல் பிரேமை அதிகம். இது வரை  4 / 5 காலகட்டத்தில் - சுமார்  மூன்று  மாதங்கள் முதல் ஆறு மாதம் வரை வைத்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வீட்டில் நான் என் தாடி அறிவிப்பை சொன்னதும் யுத்தம் நடக்கும். தாடி வைத்தல் நான் பிச்சைக்காரன் போல இருப்பதாக என் இல்லாளின் தீர்மானம். சில சமயம், "வியாதிக்காரன் " என்றும் சொல்லி இருக்கிறாள். சிற்சில உக்கிரமான மன நிலையில் "வியாதி இருக்கிற பிச்சைக்காரன் " என்றும் சொல்லியிருக்கிறதாய் நினைவு. 

ஆனால் பாருங்கள்....இந்த உலகம் எதிர்மறை விஷயங்களும். கருத்துக்களும் நிரம்பிய ஒரு அற்புத கலவை. எங்கள் உறவினர் ஒருவர் (அவள் பக்க உறவு தான் - வயது முதிர்ந்தவர்) என் தாடியைப் பார்த்து நான் ஒரு "ஞானி" போல இருப்பதாக சொல்லி அவள் மூக்கை உடைத்து இருக்கிறார். அவர் இப்போது இல்லை - என் ஞானத்தை பறைசாற்றவும் யாரும் இல்லை.... ஹ்ம்ம்ம்ம் 

ஞானியர் பலரும் பிச்சை எடுத்து வாழ்ந்தவர் தாம். எனவே இந்த வேறுபாடான இரண்டு  கருத்துகளை சம நிலையில் எடுத்துக்கொண்டு விட்டேன். 
(கௌதம புத்தர் முழு ஞானோதயம் பெற்று 7 / 8 வருடங்களுக்கு பின்னர் தன அரண்மனைக்கு வந்தாராம். அவர் மீது கோபம் குறையாத அவர் மனைவி அவர் அடைந்து இருக்கும் மேலான நிலை புரியாமல் - அவர்களின் சிறு வயது மகனை முன் நிறுத்தி - "இவனுக்கு நீங்கள் என்ன தரப்போகிறீர்கள் ?" என்று கேள்வி கேட்க, ஒரு கணம் கூட தாமதிக்காமல் ஆவலாக கௌதமர் "என் திருவோட்டினை இவனுக்கு தருகிறேன். இதை விட சிறந்த பரிசு என்ன இருக்க முடியும் ? என்று  கேட்டாராம். பிறகு அவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு விலகி - வயதாகும் வரை மனித குலத்தையே தன குடும்பாக பாவித்து வாழ்ந்த கதை சத்குரு எனக்கு சொல்லி இருக்கிறார். கவனிக்கவும், கௌதமர் தாடி வைத்தவர் இல்லை)
ஞானிக்கும் பிச்சைக்காரனுக்கும் உள்ள தொடர்பு - தாடி என்ற கருத்துக்காக சொன்னேன்.

மேலும், ஒரு விஷயம். free will என்றும் destiny என்றும் இரு கூராக நம் வாழ்க்கை இயங்குகிறது. முழுக்க ஒரு நிலையில் வாழ்வது சாமான்ய மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை. 
ஒரு வகையில், தாடி இந்த இரண்டையும் இணைக்கும் பாலமாக எனக்கு தோன்றுகிறது. 
ஆம்.... தாடி வைப்பதும் மழிப்பதும் நம் சுதந்திரமாக இருக்கலாம் (free will ); ஆனால். அது நம் தோற்றத்தை மாற்றுவது பல காரணிகள் (factors ) கொண்டது. நம்  முக அமைப்பு மற்று தோற்றம், நம் சரும வகை மற்றும், உரோமத்தின் தன்மை, நம் வயது (நரை முடி பற்றி சொல்கிறேன்) என்று பல காரணிகளால்......விதியால் (desiny ) நம் தாடி மாறு படும். 

பழைய தமிழ் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது....."என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்".....என்று சுஹாசினி பாடும் பாடல் ("கோபுரங்கள் சாய்வதில்லை ?) . 
அது போல .... " என் தாடி தான்... எனக்கு மட்டும் தான்" என்ற பொன்னான வரிகளோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன்....; 

காவியங்கள், காப்பியங்கள், மஹாத்மியங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும். 
அது சொல்ல வரும் செய்திக்கு முடிவே கிடையாது.

என்ன சொல்கிறீர்கள்...??



(பத்து வருத்திற்கு முந்தையது........; பிரபஞ்சத்தில் எதுவும் பழையது இல்லை.....)

மிக்க அன்புடன் 

suchoo 

என்று அறியப்படும் 

சுரேந்திரன்  













Friday, September 12, 2014

****** Daily Quotes *******

Dear All

Are you in the habit of sending "daily quotes" to your friends ? If the answer is no, let us compromise - as both you and me stand in the same side !

Are you getting any "daily quote" from some of your close acquaintance (friend or relative - it doesn't matter really when they are in touch with us daily, isn't it ?)

I do have a friend, a senior person working in a Bank who enlisted me - perhaps - 6 months back to his distribution list. 

Being at night shift, it has become a habit for me to look at his "quote" (rather the "quote" of some famous person thru' him - again, both are same, isn't it ?) before even I brush my teeth or clear my bowels :-)

Few are really extra ordinary (thought provoking) , many enjoyable (some thing that we agree readily) while few others keep me amused and confused. Any way, I love the flutters it create in the brain cells at the beginning of my day.

Today's quote is from Chanakya - "Books are as useful to a stupid person as a mirror is useful to a blind person". Lovely one but I doubt many of such quotes really belonging to such wonderful people who lived on earth. For example, even I am capable of saying some "pearls" of wisdom but will you agree it is from a Saadharana Prajai "suchoo" who looks bit queer and is "thinking too much about himself" ? err ?

 I just want to substitute a single word in the above quote to tarnish the one (reportedly) uttered by Chanakya.....!! Aadharaniya Chanakya Ji....its about LIFE not just BOOKS......

Period....

Have a great grand day with at least a moment to celebrate...if not, the whole of 24 hours keeping us fully dancing......!!

Love // Suren

Thursday, September 11, 2014

*********பிடித்த பத்து **********

முகநூலில் (அதுதான் facebook ) எங்கள் வீட்டு பையன் யாரோ ஒருவருக்கு பிடித்த பத்து புத்தகங்களை வெளியிட்டு எங்களையும் வெளியிடுமாறு ஊக்கப்படுத்தி இருந்தான்.

ரொம்பவும் உற்சாகமாக , மிக இயல்பாக - மனத்திற்கு பட்ட பத்து புத்தகங்களை எழுதி விட்ட பின்னர் தான் எனக்கு சட்டென்று இது பற்றி சிந்தனை முளைக்க ஆரம்பித்தது.

இது இலக்கியவாதிகளின் "தரப்பட்டியல்" அல்ல. காரணங்களோடு (சில சமயங்கள் வாதமாகவும் கூட) யோசிக்க வேண்டிய விஷயம் இல்லை.

என் பட்டியலில் சில சமீபத்தில் படித்து இரசித்தது; ஆனால் ஒரு விஷயம் பாருங்கள் -  நான் என் பட்டியலில் "kane  & abel " என்ற நாவலை எழுதிய காரணம் அது நான் முதலில் படித்த english  novel மட்டும் அல்ல - அதன் பிரம்மாண்டமும் , கட்டமைப்பும் கூட அல்ல - எனக்குள் இருந்த "ஆங்கில மொழி"த்தடையை உடைத்தது தான் காரணமோ ? தெரியவில்லை.

சற்று யோசித்த பிறகு புரிந்து போனது - காரணமே இல்லாமல் கூட சில புத்தகங்கள் பிடித்துப் போகலாம். சினிமாவோ விளையாட்டோ பொழுதுபோக்கோ, - ஏன் மனிதர்கள் கூட பிடித்து போய்விட  காரணம் ஏதும் தேவையே இல்லை. ஒரு வகையில் பார்த்தால் இந்த பிரம்மாண்டமான அகண்டத்தில் பிடிக்காதவை இருந்தால் தான் நாம் காரணம் பற்றி யோசிக்க வேண்டும். 

 நம் போன்ற சாதரணமான மனிதர்களால் எல்லாவற்றையும் வெறுப்பில்லாமல் பார்க்க இயலாமல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியது தான். பல சமயம், "comfort zone" என்பது நம் வெறுப்புக்கும் விலகலுக்கும் காரணம் ஆகி விடுகிறது. பழக்கமற்ற ஒரு புதிய விஷயத்தை - இலக்கிய புத்தகமோ ஆங்கில சினிமாவோ அல்லது நமக்கு அந்நியமான மனிதரோ - ஒரு பரிசோதிக்கும் மனநிலையில் அணுகுவதே ஒரு பெரிய யோகமாக எனக்கு படுகிறது.

சமீப காலமாக "Dr House M D " என்ற ஒரு ஆங்கில TV serial - அதி ஆர்வமாக நேரம் ஏற்படுத்திக் கொண்டு பார்த்து வருகிறேன். சுமார் 45 நிமிட episode ஒவ்வொன்றும்.... இத்தனைக்கும் எனக்கு ஆங்கிலப்படங்கள் இன்று வரை முழுவதும் புரிவது இல்லை. இப்போது sub title - இந்த serial க்கு தேவையே படவில்லை என்றால் பாருங்களேன்......!!

சுய அனுபவத்தில் ஏதேனும் சொன்னால் அது நம் வரையில் மட்டும் சத்தியமாக இருக்காது என்பது தான்  என் நம்பிக்கை.

அன்புடன்

சுரேந்திரன்













****** Promises UNKEPT *******

Dear All

I am not trying to waver away from the title - please read below before I jump back to the track

Sadhguru (Jaggi Vasudev) - it appears - has never ever missed a yoga class he had scheduled - in fact he was not even late for any of the class. 
He narrated a story in one of the sathsanghs when he got into an accident while travelling in his bike for a particular class - this happened long time back. 
His calf muscle was literally torn and he was bleeding profusely but he managed to limp his way to a local Doctor's house. The Doctor hesitated to put the stitches as he did not have anaesthetic facilities. It appears Sadhguru encouraged him to go ahead as he was already getting late for the class. 
While he observed the doctor doing his part, he had to casually talk to the Doctor who was scared by his own act.....!! 
This was the level of his mental maturity and enduring  capability. 
As one of the audience spell bound by the narration, I still remember his words towards the end "did I not have pain ? it was terrible but I did not get hurt !!" was the way he closed the incident in his typical style.

Now, coming back to the subject, I do not fancy reaching this level of maturity in this life time. 

But it is quite clear that our unkept promises are the root cause of most of our mental agonies. Be it a long pending visit to Kashi / Kedarnath or be some thing as trivial as cleaning up the book shelf which irritates us on daily basis - we are beaten up internally when we just don't do things.

Is there a way to do / achieve every thing that we aspire for ? 
I think the answer is a big NO. 
Either we should learn not to make a resolve / pledge for any thing and every thing OR prefer to take our resolutions bit easier.......!! 

Now, the latter one may put us in real danger of  taking any thing and every thing lightly. All of us know the concept of SMART goal but I wonder if "S" should indicate "selective" instead of "specific". 
I feel it is important to take goals that are worth taking - big or small ones, either way its fine but those simple tasks that we must do, better be handled without a ripple of remorse / pride about it. (I am also including a visit to our native village - which won't take more than a week end if we are willing)

See, In fact - not very long ago - in an unfortunate moment, I thought I am going to write at least one post every fortnight & I did not write this monday because......because, I had nothing to write.....!! Why the hell, a resolution ? (I am just cursing myself - no pun intended)

If you find this post simplistic, I find it a breakthrough indeed. 
At last, before getting old and disabled, I have discovered way to be happy :-)

Love // Suren