Saturday, July 3, 2010

புத்தம் புதிய புத்தன்

விஸ்வரூபமாய் பேரிரைச்சலாய் பொறுமை
மட்டும் கடுகத்தனையாய் மாநகர பேருந்துகள்.....
வாய் நிறைய வசைகளோடு சிரிக்க மறந்த எம்
இனத்தில் மறந்து பிறந்த பேரிள ஓட்டுனர்கள் !!

தன்னிச்சையாய் திரும்பி திடுக்கிட வைக்கும்
மூட்டைப்பூச்சியை நினைவுறுத்தும் ஆட்டோக்கள்....
மனித நேயம் மறந்து போய் முகம் நீண்டுப் போய்
இயந்திரமாகவே மாறிவிட்ட இளைய சாரதிகள் !!

கழுவுற மீன்களில் நழுவுகிற மீன்களாய்
புத்தி சாதுர்யத்தினால் தன்முனைப்பால்
கிடைத்த கோட்டில் தன தனி வழி அமைக்கும்
நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களின் மிதிவண்டிகள் !!

இரு சக்கர ஊர்தி ஒன்றில் மனம் போன போக்கில்
உல்லாசிகள் எவரும் அறியவில்லை இவர்களை அவ்வளவாக.....
புதுக்கார் வாங்கி மேலும் கடனாளியாகி மடிசஞ்சி அந்தணனாய்
நாடு நடுங்க நரகமான நகரத்தில் பவனி வர ..... புதிதாய் ஒரு புத்தன் ....
ஒவ்வொரு நாளும்.... !!!



2 comments:

  1. கண்ணா....., புரியலையேடா அப்பா.... What are you saying ?? The owner of a car (loan purchased)- drives it with non-nonchalance? fear? love?? unaffected by environ?? என்ன சொல்ல வரேள்??!! அந்த புத்தனுக்குதான்டாப்பா வெளிச்சம்!!

    ReplyDelete
  2. With so much nervousness about his (new) driving skills and concern that his new love (i mean the car) should not get scraches from others....he is driving....!! Budh-dham esssentially means his heightened awareness about his environment which he never cared so much until now....!!
    I liked this one than THE ALLERGY !! ennamo pongo.....!!

    ReplyDelete