Saturday, November 20, 2010

ஊழ்

கண் சிமிட்டி எட்டிப் பார்க்கும் - சில நேரம்
கண் கலங்க எட்டி உதைக்கும்
எட்டி நிற்பவரை ஏங்க வைக்கும் - க்ஷண நேரத்தில்
சிக்க வைத்து சீரழிக்கும்.......

தெளிந்ததெல்லாம் குழம்பிப் போகும் - மானுடர்
குணத்தை யெல்லாம் புரட்டிப் போடும்....
உயிருக்கு வேராய் நிற்கும் - எப்போதும் நம்மை
வெறும் நிழலாய் தொடர்ந்து வரும்........

கையற்ற நிலையில் வெளிச்சப் பொட்டாய் மலர்ந்து
நாத்திகர் சிலரை ஆத்திகராக்கும்
போலிப் பணிவையும் வீண் செருக்கையும் அழித்தொழித்து
ஆத்திகர் பலரை வெளிறச் செய்யும்

ஆக்ரோஷமாய் எனினும் நளினம் கெடாமல்
வீர்யமாய் இருந்தும் பேரன்பு அதிர்வு மிகாமல்
தீவிர நடனம் புரியும் ஊழரசிக்கு
வேறு வழியற்று நம் தலை வணங்கும் !!

2 comments:

  1. two spelling mistakes regretted...
    (1) ii PARA - Uyirukku Veraay.....- read with small "raay"
    (ii) 3rd Para - read as "velichchapp pottay"...kuril NOT nedil....

    Its destiny that two spelling mistakes crept in to this poem....Hmmm.....!!

    ReplyDelete
  2. Dear Suchoo,

    Definitely a good poem. The spelling mistake in 3rd para kills the flow. You could have deleted the poem and posted it afresh.

    "போலிப் பணிவையும் வீண் செருக்கையும் அழித்தொழித்து
    ஆத்திகர் பலரை வெளிறச் செய்யும் "
    - those two lines, sort of, links ஆத்திகர் to போலிப் பணிவு and வீண் செருக்கு - intentional??

    வேறு வழியற்று நம் தலை வணங்கும் - Yes, agreed. But, "ஆக்ரோஷமாய் எனினும் நளினம் கெடாமல், வீர்யமாய் பேரன்பு அதிர்வு மிகாமல் .." - who said that Destiny does not cross limits or break barriers??

    ReplyDelete