முன் குறிப்பு :: நான் கமல் ஹாசனுக்கு எழுதி இருக்கும் இந்த மனப்பூர்வமான மடலில் அவரது (typical ) தாக்கம் இருந்தால் அதற்கு - அவர் மட்டுமல்ல - அவரின் பரம விசிறி என்ற முறையில் நானும் ஒரு பொறுப்பு தான்....!!
அன்புள்ள ஹாசன் அண்ணா
(நீங்கள் எதுகை மோனையாக அடித்த ஹுசைனி ..... ஹாசன் .... அங்கலாய்ப்பு ஞாபகம் வந்து தொலைத்து விட்டது....மன்னித்தருள்க....)
சில மணி நேரங்களுக்கு முன்னால் உங்கள் விஸ்வரூப தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தால் ஏற்படுவது ஆனந்த அதிர்ச்சி.... !!
நமது ஆஸ்தான நடிகரின் விஸ்வரூபமாக பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு படம் பப்படம் ஆனது கொஞ்சம் வேதனை தான்.....!!
படுக்கையில் புரண்டு புரண்டு பார்த்து தூக்கம் வராமல், சரி நம்மால் முடிந்த செயலை தெரிந்த அளவு செய்யலாமே ( நான் என்ன ....கமல் ஹாசனா ??) என்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்து விட்டேன்....!!
உங்களைப்போல் பேச ஆரம்பித்து முடிக்க தெரியாமல் இழு இழு என்று இழுக்காமல் நறுக் என்று முடித்து விடுகிறேன்....சரி தானே ??
1. "நீங்கள் நல்லவரா கெட்டவரா ?" என்ற (நாயகன்) புகழ்பெற்ற வசனம் இந்த படத்திலும் வருகிறது.....; ரொம்ப சந்தோசம்....
அதை விட ஒரு முக்கியமான கேள்வி ஒன்று என்னிடம் (அநேகமாக பலரிடம்) இருக்கிறது.
மனத்தை தொட்டு சொல்லுங்கள்....."நீங்கள் நிஜமாவே நாத்திகர் தானா ? "
20 / 30 வருடங்களுக்கு முன்னால் உங்களுக்கு (ரஜினி -யுடன் ??) இருந்த தொழில் போட்டியில் கையாலாகாமல் பிராமண முத்திரையை அழிக்க பெரியார் பற்றி ஏகமாய் உளறி மீளமுடியாமல்.... ஒரு வேளை ..... சிக்கிப் போய் ......??? யோசியுங்கள்.....
இந்து மடத்தையும் மிக முக்கியமாக பிராமண குலத்தையும் தாக்கும் உங்கள் "சுய ரூபத்தை" (பிரதம உதாரணம் - அவ்வை ஷண்முகி; நீங்கள் மடிசார் கட்டும் முறையும் தலைப்பை சரி செய்து கொள்ளும் முறை பற்றியும் அவிசுவாசி ஆவதற்கு முன் உங்கள் வீடு மாதர்களிடம் கற்றுக் கொண்டீர்களோ ?) கண்டும் காணாமலும் இத்தனை வருடங்கள் பார்த்து விட்டாலும்.....உங்கள் விஸ்வ ரூபத்தில் இந்த சந்தேகம் பிருமாண்டமாக வந்து தொலைக்கிறது...
இந்து கடவுள் பற்றி அந்த கத்துக்குட்டி கதாநாயகியின் வசனங்கள் அபத்தம் ....!! ரூம் போட்டு சிந்தனை செய்தீரோ ?
இந்து கடவுள் பற்றி அந்த கத்துக்குட்டி கதாநாயகியின் வசனங்கள் அபத்தம் ....!! ரூம் போட்டு சிந்தனை செய்தீரோ ?
2. உங்களின் சிறப்பே திரைக்கதையில் மிளிரும் புத்திசாலித்தனமும் காட்சிகளின் விறுவிறுப்பும் தான்....!!
சொதப்பல்ரூபத்தில் ....மன்னிக்க.....விஸ்வ ரூபத்தில் மிக ஆராயப்பட வேண்டியது இந்த ஒரு அம்சம் - ஒரு வேளை இருந்து தொலைத்தோ என்னவோ.....? திரும்பவும் இந்த கருமத்தை ஒரு முறை பார்த்து கண்டு, தெளிந்து, உணர்ந்து .....இரசிக்க (??) வேண்டிய விஷயம்....
3. அற்புதமான "wednesday " படத்தை இஸ்லாம் சாயம் பூசி....உங்கள் கற்பனைச்சாறு சேர்த்து தமிழகத்துக்கு வழங்கி ரொம்ப நாள் ஆகவில்லை.
(அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நீங்கள் அடிக்கும் ஜோக் -க்கு என் குல மக்கள் விழுந்து விழுந்து சிரித்து theatre அதிர்ந்த போது - எனக்கு மாரடைப்பே வந்து விட்டது......; nazrudheen shah வின் மடி கிடைத்தால் சாய்ந்து கதறி இருப்பேன்.....!! _
நான் உங்களைப்போல் அறிவு ஜீவி எல்லாம் இல்லை.....அதனால் இந்த சந்தேகம்...!! ஏன் மீண்டும் மீண்டும் இது போன்ற அபத்தமான controversy யில் சிக்கி கொள்கிறீர்கள்.....?
உங்கள் சொந்த சொத்தையெல்லாம் அடமானம் வைத்து உயிரைக்கொடுத்து நீங்கள் எடுக்கும் படங்கள் அபஸ்வரங்களாக வாய்த்து விடுவது ஒரு வகையில் உங்கள் நாத்திக வேஷமும் காரணமோ ?
உங்கள் சொந்த சொத்தையெல்லாம் அடமானம் வைத்து உயிரைக்கொடுத்து நீங்கள் எடுக்கும் படங்கள் அபஸ்வரங்களாக வாய்த்து விடுவது ஒரு வகையில் உங்கள் நாத்திக வேஷமும் காரணமோ ?
4. இந்த பட வெளியீட்டில் ஏற்பட்ட சர்ச்சை காலத்தில் - ஏதோ ஒரு டிவி channel - ல் நீங்கள் "இன்ஷா அல்லா" என்று நிறைந்த புன்னகையோடு சொன்னது பார்த்து எனக்கு அதிர்ச்சியில் படபடப்பு ஏற்பட்டு விட்டது.....;
அது என்ன ஐயா ? நமது முதல்வர் உங்களை மதம் மாறி விடச் சொல்லி விட்டாரா என்ன ? (வெச்சா குடுமி.....சரைச்சா மொட்டை யா ?); நீங்கள் இந்த படத்தில் சண்டை காட்சிகளில் அடித்த பல்டி எல்லாம் ஒன்றுமே இல்லை....
5. எத்தனையோ குறைகள் இருந்தாலும் நமது நாட்டுக்கு வாய்த்த காங்கிரஸ் கட்சி போல, தமிழ்த் திரைப்படத் துறையில் உங்கள் நெடும் பயணம் உங்களை தவிர்க்க முடியாத சக்தி யாகி விட்டது.....!!
ஏனோ சச்சின் டெண்டுல்கரின் தீனமான ஓய்வு ஞாபகம் வந்து தொலைக்கிறது.....!!
உங்களுக்கு தான் நகைச்சுவை நன்றாக வருகிறதே......!!
சொச்ச வாழ்க்கையில் relaxed ஆக (சொத்தை எல்லாம் அடமானம் வைக்காமல்) பம்மல் சம்மந்தம், தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற நல்ல ஜன ரஞ்சக படங்களை எடுத்து சேவை செய்யலாமே ?
சொச்ச வாழ்க்கையில் relaxed ஆக (சொத்தை எல்லாம் அடமானம் வைக்காமல்) பம்மல் சம்மந்தம், தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற நல்ல ஜன ரஞ்சக படங்களை எடுத்து சேவை செய்யலாமே ?
6. கட்டுபடுத்திக் கொள்ளவே முடியாமல் கடைசியாக ஒரு கேள்வி .... முக்கியமான உங்கள் "விஸ்வரூபம்" பார்த்தால் பீரிட்டு எழும் கேள்வி.....
ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று உங்களுக்கு நிஜமாகவே நம்பிக்கை இருக்கிறதா.....? சும்மா "உலு உலா " தானே ??
விதேயன்
(விஸ்வரூபம் 2 ஐ விதிர்விதிர்ப்போடு எதிர் நோக்கும்)
சுரேன்......